மொழி EN English| සිං සිංහල

நாங்கள் யார்?

“இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) என்பது 1992ம் ஆண்டில் இணையம் தொடர்பிலான வரையறைகள், கல்வி, அணுகுகை மற்றும் கொள்கைகள் போன்றவற்றிற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதொரு இலாப நோக்கற்ற அமெரிக்க அமைப்பாகும். இணையத்தின் அபிவிருத்தி, பரிணாம விருத்தி, பயண்பாடு என்பனவற்றை உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் விருத்தி செய்வதே இவ் அமைப்பின் குறிக்கோளாகும்.

“இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) இன் இலங்கைப் பிரிவானது உலகலாவிய இணைய சமூகத்தின் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு அமைப்பினது நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில் எமது நாட்டிற்குரிய இணைய பிரச்சனைகள், அபிவிருத்தி மற்றும் பிரதேசத்திற்குரிய மொழிகளின் பிரயோகம் என்பவற்றினை முன்னிறுத்தி உள்நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வருகிறது.

அனைவருக்கும் அனைத்து இடங்களுக்குமான இணையத்தை உருவாக்குதல்

திறந்த, வெளிப்படைத்தன்மையான, தம்மால் வரையறுக்கப்படக்கூடிய தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பல்துறை நம்பிக்கையாளர் சபையினால் ஆளப்படும், சர்வதேச தூண்டுதல் நிறுவனமே “இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) ஆகும்.

அனைவருக்குமான இணையம்.

“இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) ஊடாக இணையத்தினை பூகோள தொழில்நுட்ப கட்டமைப்பாகவும், மக்களின் வாழ்க்கையை செழிப்பூட்டுவதற்கான வளமாகவும் மற்றும் சமூகத்தில் நல்லதொரு சக்தியாகவும் மாற்றுவதற்கான மேம்படுத்தல்களையும் உதவிகளையும் செய்து அபிவிருத்தி செய்தல்

இணையத்தை பாதுகாப்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், திறந்ததாகவும், மற்றும் பூகோளரீதியல் இணைக்கப்பட்டதாகவும் மாற்றுவதற்கான எமது இலக்குகளுடன் எமது செயற்பாடுகள் இயைந்துள்ளது. இவ் இலக்குகளை அடைந்து கொள்வதில் பங்களிக்கும் அனைவருடனும் கைகோர்ப்பதற்கு எதிர்பார்க்கிறோம்.

இணையத் தொழிலில் ஈடுபடும் சமூகத்தினரை கட்டியெழுப்புதலும் ஆதரவளித்தலும்;

இணைய கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் திறந்த வரையறைகள் என்பவற்றினை பயண்படுத்தவும் அபிவிருத்தி செய்வதற்குமான முன்னுரிமைப்படுத்தல் ;

இணையம் தொடர்பான எமது பார்வையுடன் இயைந்து செல்லக்கூடிய கொள்கைகளுக்கான பரிந்துரைகளைச் செய்தல்

எமது சேவைகள்

எமது அமைப்பானது எமது கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடைந்துகொள்ளும் வகையில் கீழ்வருவனவற்றை உள்ளடக்கி பல்வேறுபட்ட நிகழ்வுகளையும், வேலைத்திட்டங்களையும் மற்றும் செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது:

கல்வி நிகழ்வுகள்

இணையத்தோடு தொடர்பான பாதுகாப்பு, அகன்ற அலைவரிசையின் அணுகுகை, சிறுவர் பாதுகாப்பு, புதிய வலைப்பின்னல் வரைமுறைகள், பாதிப்பற்ற வலைப்பின்னல் போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகள் தொடர்பில் அங்கத்தவர்களிற்கும் பொது மக்களிற்கும் அறிவூட்டல்.

சமூக நிகழ்ச்சித்திட்டங்கள்

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களும் விஷேட தேவை உடையவர்களும் இணையத்தை அணுகுவதை உறுதிப்படுத்தல். இது வன்பொருள், மென்பொருள் போன்றவற்றை விநியோகித்தலும் நடைமுறைக்கு சாத்தியமான வேறு விடயங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றினூடாக செயற்படுத்தப்படுகிறது.

பொதுக் கொள்கை நிகழ்ச்சித்திட்டங்கள்

வலைப்பின்னலில் உள்ள பாதிப்புகள், காப்புரிமை பாதுகாப்பு, இணைய தடுப்புகள், மனித உரிமைகள் போன்ற இணையம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சட்டவாக்குனர்களுக்கு தகவல் வழங்குதல்.

வலையமைப்பு நிகழ்வுகள்

அனைவருக்கும் இணையம் எனும் எண்ணக்கருவுக்கு பங்களிக்கும் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் நபர்களுடன் எமது அமைப்பின் அங்கத்தவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வலையமைப்பை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்குதல்.

எமது பிராந்திய நிகழ்ச்சித்திட்டங்கள்

இலங்கையில் இணையப்பாவனையை அதிகரித்தல்.

ஆராய்ச்சிகளை உள்ளூர்மயப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதுடன் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் உள்நாட்டு உள்ளடக்கங்களை உருவாக்குவதை ஊக்குவித்தலும்.

இணைய தொடர்புகளை ஏற்படுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் இலங்கையின் கிராமப்பகுதிகளுக்கு இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் செயற்பட்டுவரும் ஐசொக் (ISOC chapter) பிரிவுகளில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு இடையிலான இடைவினைகளை அதிகரித்தல்.

எமது அமைப்பிற்கு சமமான அக்கறைகளைக் கொண்டுள்ள ஏனைய அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நல்லுறவைப் பேணல்.

இணைய தொகுத்தவரிசை மற்றும் அகலப்பட்டை தொடர்பாடல் என்பவற்றிலுள்ள பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் அதே வேளை இலங்கையில் இணைய தொகுத்தவரிசை மற்றும் இணைய அகலப்பட்டை என்பனவற்றுக்கான தரநிர்ணயங்களை மேற்கொள்ளும் அரச நிறுவனங்களுக்கான ஆலோசனையாளராக செயற்படல்.

இலங்கையைச் சேர்ந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறைசார்ந்தவர்கள் மற்றும் அமைப்புகள் இணைய பொறியியல் பணிக்குழு போன்ற (IETF) உலகலாவிய நிறுவனங்கள் / குழுக்களில் பங்குபற்றுவதற்கான வழிகாட்டல்களை வழங்கி விழிப்புணர்வூட்டல்.

புதிய தர நிர்ணயங்கள், இணைய தொழில்நுட்பங்கள், மற்றும் புதிய வரைமுறைகள் (IPV6 போன்றன) என்பனவற்றை மேம்படுத்தும் அதே வேளை பிரஜைகளின் இணைய அணுகுகை மற்றும் இணையத்தில் உள்ளடக்கங்களை பதிவேற்றல் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் இணையத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் சிறுவர் பாலியல், இணைய மோசடி போன்ற தீங்கியல் விளைவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கக்கூடிய கொள்கை வகுப்புகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்குதல்.

இலங்கைக்குரிய சர்வதேச இணையப் பெயர்களின் பாவனையை ஊக்குவித்தல். (.lk .ලංකා .இலங்கை)